ஒப்புதல் அளிக்காத கிரண்பேடி.. புதுச்சேரியில் மதுபானக் கடைகள் இன்றும் திறப்பு இல்லை

ஒப்புதல் அளிக்காத கிரண்பேடி.. புதுச்சேரியில் மதுபானக் கடைகள் இன்றும் திறப்பு இல்லை
ஒப்புதல் அளிக்காத கிரண்பேடி.. புதுச்சேரியில் மதுபானக் கடைகள் இன்றும் திறப்பு இல்லை

புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக் கடைகளை திறக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததால் இன்றும் மதுபானக் கடைகளை திறக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

பொதுமுடக்கம் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு சில தளர்வுகளை வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக் கடைகளை திறக்கலாம் என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு கோப்புகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பப்பட்டது.அதற்கு அவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதுகுறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமியும் சட்டப்பேரவையில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் அஸ்வனி குமார், கலால் துறை செயலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற கூட்டதில் மதுபானக் கடைகளை திறப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவு என்பதால் மதுக்கடைகளை திறந்தால் கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தமிழக மாவட்டங்களில் இருந்து மது அருந்த வரும் போது புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளதால் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலையை உயர்த்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே மதுபானக் கடைகளை திறக்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கோரி கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக் கடைகளை திறக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்னும் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் இன்றும் மதுபானக்கடைகளை திறக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com