கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி.. புதுச்சேரியில் புதிய கிளை திறப்பு
புதுச்சேரியில், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமியின், புதிய கிளை நேற்று திறக்கப்பட்டது.
கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இந்தக் கிளைகளை தொடர்ந்து, புதிய கிளை நேற்று திறக்கப்பட்டது. இது புதுச்சேரி வில்லியனுார் சாலை மோத்திலால் நகரில் அமைந்துள்ள வாசவி மால் முதல் தளத்தில் அமைந்துள்ளது.
நிகழ்ச்சியை கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனரும், இயக்குனருமான பூமிநாதன் தலைமை தாங்கி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அரசு செயலர் முகமது மன்சூர், புதிய கிளையை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, புதியதாக ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பிற்கு வந்த மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில், உறுப்பினர்கள், குடும்ப நண்பர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறுவனர் கூறுகையில், 'கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சென்னை, டெல்லி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்த கிளைகளை தொடர்ந்து, புதுச்சேரியில், நேரடி பயிற்சி வகுப்பபிற்காக புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-25ம் ஆண்டு வெளியான யு.பி.எஸ்.சி., தேர்வு முடிகளில், இந்திய அளவில், எங்கள் நிறுவனத்தில், பயிற்சி பெற்றவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அதில், 138 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி, கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயனடையும் வகையில், புதுச்சேரி யில் திறக்கப்பட்டுள்ளது" என்றார்.