தமிழக மீனவர்களை கொன்றதை ஏற்க முடியாது: இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்

தமிழக மீனவர்களை கொன்றதை ஏற்க முடியாது: இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்

தமிழக மீனவர்களை கொன்றதை ஏற்க முடியாது: இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்
Published on

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கொன்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சமீபத்தில் இலங்கை கடற்படையினர்  தமிழக மீனவர்கள் 4 பேரை கொன்ற விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள்  கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் எழுப்பினர். இந்த கொலைச் சம்பவங்களை பிரதமர் மோடி கண்டிப்பதுடன், தேவையான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எடுக்க வேண்டும் என திருச்சி சிவா, தம்பித்துரை உள்ளிட்ட எம்.பி.க்கள் வலியுறுத்தி பேசினர்.   

அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுந்து பேசுகையில் “தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசிடம் கடுமையான கண்டனத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாத செயல், இலங்கை அரசிடம் இது தொடர்பாக மிக, மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

<iframe width="699" height="393" src="https://www.youtube.com/embed/x1R_LSnn_qo" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com