இந்தியா
அற்ப காரணத்துக்காக அதிகரிக்கும் கொலைக் குற்றங்கள் - டெல்லி காவல்துறை
அற்ப காரணத்துக்காக அதிகரிக்கும் கொலைக் குற்றங்கள் - டெல்லி காவல்துறை
தலைநகர் டெல்லியில் நடைபெறும் கொலைகளில் ஐந்தில் ஒன்று, அற்பத்தனமான விஷயங்களுக்காக நடப்பதாக காவல்துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற குற்ற விவரங்கள் குறித்த புள்ளி விவரத்தை அந்த மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 259 கொலைகளில் 53 கொலைகள் சிறிய தகராறுகளுக்காக நடந்தது தெரிய வந்துள்ளது.
வீட்டருகே சிறுநீர் கழித்தல், வீட்டின் முன் வாகனத்தை நிறுத்துதல், கைமாற்றுக் கடன் போன்ற சிறிய தகராறுக்காக ஐந்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மற்ற கொலைகளில் கொள்ளை, கடத்தல், பெரிய தொகைக் கடன் ஆகியவை பெரும்பங்கு வகிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.