வாடகை காரில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
தானேவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாடகை காரில் தனது இல்லத்திற்கு சென்றுள்ளார். அந்த வாகனத்தில் ஏற்கனவே ஒரு நபர் இருந்துள்ளார். கார் அந்த பெண் செல்ல வேண்டிய தடத்தில் செல்லாமல் மாற்று வழியில் சென்றுள்ளது. இதனை அறிந்த அந்த பெண் தனியார் கார் நிறுவனத்திற்கு இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் கார் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த மற்றொரு நபரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் கார் பயணம் செய்த தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு சோதனை செய்தனர். காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சுரேஷ், உமேஷ் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வாடகை கார் நிறுவனம் தரப்பில் தெரிவித்ததாவது, இச்சம்பவத்திற்கு தங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கைது செய்யப்பட்டுள்ள நபர் பணம் கையாடல் செய்த புகாரில் தங்கள் நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.