கர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார்

கர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார்

கர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார்
Published on

தானேவில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவன் வரதட்சனை கேட்டு வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மஹாராஷ்டிரா, தானே பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதல் அந்த பெண்ணை கணவர் கணேஷும் அவரது குடும்பத்தாரும் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அப்பெண் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தன்னை கணவர் கணேஷும் அவரது குடும்பத்தாரும் வரதட்சனை கேட்டு நீண்ட நாளாக கொடுமை படுத்தி வருவதாக தெரிவித்திருந்தார். மேலும் தான் கருவுற்றிருந்ததாகவும், என்னை கணவர் வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இதனால் கணேஷ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் ஐபிசி 315 மற்றும் 498 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com