புத்தகப் புழுக்களாக இருக்காதீர்கள் - அர்விந்த் கெஜ்ரிவால்

புத்தகப் புழுக்களாக இருக்காதீர்கள் - அர்விந்த் கெஜ்ரிவால்

புத்தகப் புழுக்களாக இருக்காதீர்கள் - அர்விந்த் கெஜ்ரிவால்
Published on

புத்தகப் புழுக்களாக இல்லாமல், ஆளுமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் அர்விந்த் கெஜ்ரிவால்.

பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வில் தேர்ச்சியடைந்த, 372 அரசுப்பள்ளி மாணவர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “உங்கள் நாடு உங்களுக்களித்த வாய்ப்பை, நீங்கள் வளர்ந்து நல்ல நிலையை அடைந்த பிறகு மற்றவர்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும். நாட்டிற்காக நீங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை ஒதுக்கி வையுங்கள். கட்டணத்தால் மாணவர்கள் படிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படக்கூடாது. அதனால்தான், எந்த சொத்தையும் அடகு வைக்காமல், மாணவர்கள் 10 லட்சம் வரை கடன் பெறும் வகையில் Guarantee Free கல்விக்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், புத்தகப் புழுக்களாக மட்டும் இருந்துவிடாமல், மாணவர்கள் தங்களின் ஆளுமையை வளர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com