\
Kharge’s Remarks on Modi’s Father Spark Political Row
மல்லிகார்ஜுன கார்கே - மோடிPTI -ANI

மோடியின் தந்தை குறித்து அவதூறு? மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பாஜக போராட்டம்!!

பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய கருத்து, தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.
Published on: 

பீகார் மாநிலம் பாட்னாவில், மாநிலத்தின் முதல் முதலமைச்சரான ஸ்ரீ கிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

குறிப்பாக, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சிறைக்குச் செல்வார்கள் எனப் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், ’மோடி எங்கும் செல்லமாட்டார்’ (Modi nahi jayega) என்று குரல் எழுப்பினார். இதற்குப் பதிலளித்த கார்கே, “மோடியின் தந்தையாக இருந்தால் கூட செல்வார்” (Modi ka baap bhi jayega) என கோபமாக பேசியது சர்ச்சையானது. மேலும், இதுதொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கேANI

இந்தப்பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கார்கே நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள பாஜக மாநிலத் தலைமையகங்களில் இன்று போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று பிகாரில் பாஜகவினர் இன்று கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.

அதேசமயம், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்து காங்கிரஸ், கார்கே மோடியின் அரசியல் மற்றும் சித்தாந்தப் பின்னணியைக் குறிக்கும் வகையிலேயே பேசியதாகவும், குறிப்பாக, மோடியின் சித்தாந்தத் தந்தை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் குறிப்பிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Kharge’s Remarks on Modi’s Father Spark Political Row
வங்கக்கடலில் உருவானது அர்னாப் புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com