வீட்டை சுத்தம் செய்தபோது அசம்பாவிதம்-மாடியிலிருந்து விழுந்த தம்பியை தாங்கிப்பிடித்த அண்ணன்

வீட்டை சுத்தம் செய்தபோது அசம்பாவிதம்-மாடியிலிருந்து விழுந்த தம்பியை தாங்கிப்பிடித்த அண்ணன்
வீட்டை சுத்தம் செய்தபோது அசம்பாவிதம்-மாடியிலிருந்து விழுந்த தம்பியை தாங்கிப்பிடித்த அண்ணன்

கேரள மாநிலம் மலப்புரத்தில் வீட்டை சுத்தம் செய்யும்போது மேல் மாடியிலிருந்து தவறி விழுந்த தம்பியை, அவரது அண்ணன் தாங்கிப்பிடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலப்புரம் அருகேயுள்ள சங்கரம்குளம் பகுதியில், சகோதரர்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல்தளத்தில் இருந்த தம்பி சாதிக் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். அச்சமயம் இதனைப் பார்த்த அவரது அண்ணன் ஷஃபீக், தம்பியை தாங்கிப் பிடித்தார். இதில் இரண்டு பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பரவி வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com