பழங்குடியினரின் எதிர்ப்பையும் மீறி அகஸ்தியர்கூட மலையேற்றத்துக்கு தயாராகும் பெண்கள் !

பழங்குடியினரின் எதிர்ப்பையும் மீறி அகஸ்தியர்கூட மலையேற்றத்துக்கு தயாராகும் பெண்கள் !

பழங்குடியினரின் எதிர்ப்பையும் மீறி அகஸ்தியர்கூட மலையேற்றத்துக்கு தயாராகும் பெண்கள் !
Published on

பெண்களின் சம உரிமையை நிலைநாட்டும் ஆண்டாக 2018 ஆம் ஆண்டு அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஆம், கேரளாவின் பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலி் அனைத்து வயது பெண்களும் சென்று வழிப்படலாம் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இதனால் கேரளாவில் பெரும் வன்முறை வெடித்தாலும் ஒரு சில பெண்கள் சாமி தரிசனம் செய்து திரும்பியுள்ளனர். இதேபோல கேரளாவில் அகஸ்தியர்கூட மலைக்கு பெண்கள் செல்வதற்கான தடையையும் அம்மாநில உயர்நீதிமன்றம் நவம்பர் 30 ஆம் தேதி வெளியிட்ட தீர்ப்பில் வழங்கியுள்ளது.

திருவனந்தபுரத்தில், நேயர் வனவிலங்கு சரணாலயம் அருகே இருக்கிறது அகஸ்தியர்கூடம். இந்த மலை கடல்மட்டத்தில் இருந்து 1,868 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்திலிருக்கும் அதிருமலை  வரை மட்டுமே பெண்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு மாதத்துக்கு  இந்த மலையில் மக்கள் ட்ரெக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தங்களின்  கலாசாரத்தைக்  காரணம் காட்டி, அங்குள்ள கனி பழங்குடி மக்கள் பெண்களை இங்கே அனுமதிக்கவில்லை.அகஸ்தியர் முனிவர் இங்குத் தங்கி இருந்ததாக இங்குள்ள ஆதிவாசி மக்களான கனி பழங்குடியினர் நம்புகின்றனர். 

மேலும் அகஸ்தியர்கூட மலையில், அகஸ்தியர் முனிவருக்குத் தனியாக கோயில் இருந்தாலும் இங்கு வழிபாடு செய்வதற்கு பெண்களுக்கு காலங்காலமாக அனுமதியில்லை. இங்குள்ள கனி பழங்குடியைச் சேர்ந்த பெண்கள் கூட சிலை அருகே செல்வது கிடையாது. இந்த நடைமுறையைக் கனி பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த முடிவை எதிர்த்து, 'விமன் இன்டக்ரேஷன் மற்றும் குரோத்  த்ரூ ஸ்போர்ட்ஸ் (Women Integration and Growth through Sports)'  என்ற அமைப்பு,  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனு சிவராமன், பெண்களுக்கு அனுமதி வழங்கியும், மலை ஏற மாநில அரசு வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தியும் தீர்ப்பு வழங்கினார். இந்த மலைக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கக்கோரி,   2017-ம் ஆண்டு முதன்முறையாக 'பென்னொருமா (Pennoruma)' என்ற அமைப்பு , 51 பெண்களுடன் மலை ஏற முயன்றது. ஆனால், இது தங்களின் பாரம்பர்யப் பழக்கவழக்கத்துக்கு எதிரானது என்று அங்குள்ள ஆதிவாசி மஹாசபா, நீதிமன்றத்தை அணுகியது.

ஆனால் இப்போது நீண்டகாலமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதால் அங்கு டிரக்கிங் செல்ல ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும்  தொடங்கப்பட்டள்ளது. முன்பதிவு தொடங்கிய 2 மணிநேரத்தில் அனைத்தும் முடிந்தது. ஜனவரி 14- ஆம் தேதி அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள், ஆண்கள் அனைவரும் மலையேற்றத்துக்குச் செல்ல உள்ளனர். ஏறக்குறைய 41 நாட்கள்வரை அகஸ்தியர்கூட மலைக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மேலும், இந்த மலைக்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நலமாக இல்லாதவர்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு காரணங்களாக அனுமதி மறுத்துள்ளனர்.

ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் மலையில் உச்சியிலே வேறு எங்கும் கழிவறை வசதிகள் இல்லை என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைஏற்றம் வருபவர்கள் தீப்பந்தம், குடில்அமைத்து தங்குதல், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி தொடங்கும் இடத்தில் மட்டும் பெண்களுக்கு கழிப்பிட வசதி இருக்கிறது. அதன்பின் வனப்பகுதியில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அங்குள்ள ஆதிவாசி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அகஸ்தியர்கூடம் கனி சமூகத்தினர் மட்டும் அகஸ்தியர் முனியை வழிபட்டு வருகிறோம். எங்கள் குலப்பெண்கள் யாரும் கோயிலுக்குள் வரமாட்டார்கள், கோயில் அமைந்திருக்கும் உச்சிமலைப்பகுதிக்கும் செல்லமாட்டார்கள். இதைப் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிறோம் என தெரிவிக்கின்றனர்.

Source: The Hindu

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com