தினந்தோறும் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே புத்தகங்களை விநியோகிக்கும் கேரள பெண்!

தினந்தோறும் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே புத்தகங்களை விநியோகிக்கும் கேரள பெண்!

தினந்தோறும் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே புத்தகங்களை விநியோகிக்கும் கேரள பெண்!
Published on

கடவுளின் தேசமான கேரளாவின் வயநாடில் திரும்புகிற திசையெல்லாம் பச்சை பசேல் என காட்சி அளிக்கும் செடி, கொடிகளுக்கு பஞ்சமே இல்லை. அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவர் தான் 64 வயதான ராதாமணி. தற்போது அங்கு இயங்கி வரும் பிரதிபா பொது நூலகத்தில் நடமாடும் நூலகராக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல் அந்த நாள் உட்பட அனைத்து நாளும் பொடி நடையாக பல கிலோமீட்டர் தூரம் நடந்தே புத்தகங்களை வீடுதோறும் விநியோகித்து வருகிறார். 

“வேலைக்கு செல்லும் பெண்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று தான்  வீட்டில் இருப்பார்கள். அவர்களது புத்தகம் வாசிப்பு பழக்கத்தை அற்று போக செய்யக் கூடாது என்ற நோக்கில் அந்த நாளிலும் புத்தகங்களை விநியோகித்து வருகிறேன். புத்தகங்கள் ஒவ்வொன்றும் மனங்களில் விதைக்கப்படுகின்ற விதை அல்லவா” என்கிறார் அவர். 

கொரோனா பொது முடக்கம் கூட ராதாமணியை முடக்கவில்லை. அந்த சமயத்திலும் ஆக்டிவாக அவர் புத்தகங்களை விநியோகித்து வந்துள்ளார். அவர் வேலை செய்யும் நூலகத்தில் தற்போது 102 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 94 பேர் பெண்கள். 

“எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இந்த பணியை தொடங்கிய பொது பெரும்பாலான பெண்கள் நூலகத்தின் புத்தகங்ளை படிக்க தயாராக இல்லை. மலையாள வார இதழ்கள் அவர்களது உள்ளத்தை ஆட்சி அதற்கு காரணம். அதனை சவாலாக எடுத்துக் கொண்டு நாவலில் தொடங்கி பயணக்கட்டுரை வரையிலான பல சுவாரசியமான புத்தகங்களை அவர்களிடம் கொடுத்து படிக்கத் தூண்டினேன். இப்போது இந்த புத்தகம் வேண்டும் என அவர்களே கேட்டு வாங்கிப் படிக்கிறார்கள்” என்கிறார் ராதாமணி.

தனது சிறு வயதில் தினசரி நாளிதழ்களை படிக்க தொடங்கிய நாளடைவில் புத்தகங்களை வாசிக்கும் வழக்கத்தை பெற்றுள்ளார். வயநாடில் இப்போது அவர் வேலை செய்து வரும் நூலகத்துடன் கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகி உள்ளது. முதலில் வாசகியாக இருந்த அவர் இப்போது அந்த நூலகத்தின் நூலகராகியுள்ளார். 

இது தவிர சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் அவர் இயங்கி வருகிறார். அதற்காகவே பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியை அவர் கற்றுள்ளார். கேரள அரசு பெண்களும் புத்தகங்களை படிக்க வேண்டுமென்ற திட்டத்தில் கொண்டுவந்த மக்கள் நல திட்டத்தின் கீழ் அவர் இந்த நூலகர் பணியை செய்து வருகிறார். 

நன்றி : THE NEWS MINUTE  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com