\
கேரளாவில் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை

கேரளாவில் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை

கேரளாவில் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை
Published on

கேரளாவில் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஒரு பெண்.

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளைக் கொன்று தூக்கில் மாட்டிவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மரம் ஏறும் தொழிலாளியான அந்தப் பெண்ணின் கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

குழந்தைகளை தூக்கிலிடுவதற்கு முன்பு அவர்களுக்கு விஷம் கொடுத்துள்ளதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். ஆனால் விஷம் கொடுத்து கொலை செய்தது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம், கணவருடன் ஏற்பட்ட சண்டையால் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com