3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்து, கேரள பெண் உலக சாதனை

3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்து, கேரள பெண் உலக சாதனை
3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்து, கேரள பெண் உலக சாதனை

கேரளாவை சேர்ந்த ஆரத்தி ரெகுநாத், யுனிவர்சல் ரெக்கார்ட் மன்றத்தில் (யுஆர்எஃப்) மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்த உலக சாதனையை படைத்துள்ளார்.

தற்போதைய கோவிட் -19 நெருக்கடியால் மக்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கே போராடி வரும் நிலையில், கொச்சியில் உள்ள எலமக்காராவைச் சேர்ந்த ஆரத்தி ரெகுநாத் இந்த சூழலை தனக்கு பயனுள்ள வகையில் மாற்றியுள்ளார். பொதுமுடக்கத்தின்போது அவர் தனது ஓய்வு நேரத்தை  ஆன்லைன் வகுப்புகளுக்காக செலவிட்டார், இதன் காரணமாக யுனிவர்சல் ரெக்கார்ட் ஃபோரம் (யுஆர்எஃப்) இலிருந்து ஏராளமான ஆன்லைன் படிப்புகளை முடித்ததற்காக உலக சாதனையையும் இவர் படைத்துள்ளார். எம்இஎஸ் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு எம்எஸ்சி உயிர்வேதியியல் படிக்கும் இவர் கடந்த மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்துள்ளார்.

ஆரத்தி ரெகுநாத், ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகம், டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (டி.டி.யு), வர்ஜீனியா பல்கலைக்கழகம், நியூயார்க் மாநில பல்கலைக்கழகம், கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம், கோபன்ஹேகன் பல்கலைக்கழகம், ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் , எமோரி பல்கலைக்கழகம் மற்றும் கோசெரா திட்ட நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களில் இவர் இந்த படிப்பை முடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com