இந்தியா
“என்பிஆரை அமல்படுத்தாவிட்டால் கேரள அரசுக்கு ரேஷன் கிடையாது”- பாஜக செய்தித் தொடர்பாளர்..!
“என்பிஆரை அமல்படுத்தாவிட்டால் கேரள அரசுக்கு ரேஷன் கிடையாது”- பாஜக செய்தித் தொடர்பாளர்..!
கேரள அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தாவிட்டால் மாநிலத்திற்கு வழங்கப்படும் ரேஷன் நிறுத்தப்படும் என பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்துக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்குபவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டியிருக்கும் எனவும் கூறினார்.
இந்தியாவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் குறித்த பதிவேடு (என்பிஆர்) என்று இந்தியாவின் மக்கள்தொகை ஆணையாளர் விளக்கம் அளித்துள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவு நாட்டின் மக்கள் எண்ணிக்கை குறித்த தகவல்களைக் கொண்டிருக்கும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒருவரின் அதிகப்பட்ச தகவல்களை எதிர்பார்க்கிறது. மேலும், அவருடைய குடியுரிமை குறித்து அவர்கள் அளித்த தகவல்களும் அங்க அடையாளங்களும் அதில் இடம்பெறும்.

