
மலப்புரத்தில் வீட்டை சுத்தம் செய்யும்போது மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை தாங்கிப் பிடித்த அண்ணன், இருவரும் உயிர் தப்பிய அதிசயம் விடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள சங்கரம்குளம் பகுதியில் அண்ணன் தம்பி இருவரும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது மேல் மாடியில் இருந்து தம்பி சாதிக் தவறி விழுவதை பார்த்த அண்ணன் ஷஃபீக் அவனை தாங்கிப் பிடித்துள்ளார்.
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.