கொச்சியில் வாக்குவாதத்தின் போது டாக்சி டிரைவரை தாக்கிய 3 டிவி நடிகைகளை போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் கிளாரா, ஷீஜா, ஏஞ்சல் ஆகிய மூன்று மலையாள டிவி நடிகைகள் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல, ஷேர் டாக்சியை புக் செய்துள்ளனர். இதையடுத்து வந்த டாக்சியில் ஏற்கனவே ஒரு நபர் இருக்க, அவரை இறக்கி விடுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவரும் வாடிக்கையாளர் தான், அவரை பாதி வழியில் இறக்கி விட முடியாது, வேண்டுமென்றால் முன்புறம் அமர்த்தி கொள்ளலாம் என டாக்சி டிரைவர் கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த நடிகைகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்ற ஆத்திரமடைந்த நடிகைகள், டாக்சி டிரைவரை கூட்டாக சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். இதில் காயமடைந்த டிரைவர், போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நடிகைகளை போலீசார் கைது செய்தனர்.