உயிரிழந்த டிக்கெட் பரிசோதகர் வினோத்ட்விட்டர்
இந்தியா
கேரளா: டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்த நபர்... இறங்கச் சொன்ன பரிசோதகருக்கு நேர்ந்த பரிதாபம்!
கேரளாவில் ஓடும் ரயிலில் இருந்து பயணியால் தள்ளிவிடப்பட்ட டிக்கெட் பரிசோதகர், எதிரே வந்த ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் வினோத், பாட்னா நோக்கி புறப்பட்ட ரயிலில் பணியில் இருந்துள்ளார். அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்ற புலம்பெயர் தொழிலாளி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது அவருக்கு தெரியவந்துள்ளது.
டிக்கெட் பரிசோதகர் வினோத்
இதனால் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ளுமாறு ரஜினியிடம் வினோத் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரஜினிகாந்த், கதவின் அருகே நின்றிருந்த வினோத்தை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். அப்போது எதிரே வந்த ரயில் மோதியதில் வினோத் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருங்குடி: மதுபோதையில் ரகளை செய்த நபர்.. கொலை செய்து உடலை தலைகீழாகப் புதைத்த சக கட்டட தொழிலாளர்கள்!
தகவலறிந்த காவல் துறையினர், பாலக்காடு அருகே ரஜினிகாந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.