கேரளா: மூன்று கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர்
கொரோனா தடுப்பூசிக்கான பற்றாக்குறை எழுந்துள்ள சூழலில், கேரள அரசு மூன்று கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டரை அறிவித்தது.
இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், “தடுப்பூசி தேவையை பூர்த்திசெய்வதற்காக உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முன்னர் அறிவித்தபடி, 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில், தடுப்பூசிகள் முதலில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ”என்றார்.
இந்த தடுப்பூசியை பெறுவதற்கு மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் பதிவுசெய்த பிறகு, கேரள அரசின் இணையதளத்திலும் பதிய வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் இணை நோய் உள்ளதற்கான சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே, தற்போது தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி பெறுவதற்காக இதுவரை, 50,178 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 45,525 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.