பாவமன்னிப்பு கேட்கும் முறைக்கு தடை கிடையாது

பாவமன்னிப்பு கேட்கும் முறைக்கு தடை கிடையாது

பாவமன்னிப்பு கேட்கும் முறைக்கு தடை கிடையாது
Published on

கிறிஸ்தவ தேவாலயங்களில் பாவமன்னிப்பு வழங்கும் முறைக்கு தடை விதிக்கவேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் அளித்த பரிந்துரையை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் மறுத்துள்ளது. 

கிறிஸ்தவ தேவாலயங்களில் மக்கள் தங்கள் பாவங்களை பாதிரியார்களிடம் தெரிவித்து, அவற்றுக்கு மன்னிப்பு கோரும் பழக்கம் இருந்து வருகிறது. கேரளாவில் அவ்வாறு பாவமன்னிப்பு கோரிய ஒரு பெண்ணை மிரட்டி சில பாதிரியார்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்தப் பெண்ணின் கணவர் கூறியது சமீபத்தில் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து, தேவாலயங்களில் பாவமன்னிப்பு கோரும் பழக்கத்தால் பெண்கள் மிரட்டப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் அந்த முறைக்கு தடை விதிக்கவேண்டும் என தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா பரிந்துரைத்தார். 

இந்த பரிந்துரையை நிராகரிப்பதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சையது கியோருள் ஹசன் ரிஷ்வி தெரிவித்துள்ளார். பாவமன்னிப்பு கோருவது கிறிஸ்வத மதத்தின் அடிப்படையான நம்பிக்கை என்றும், அதை தடை செய்யமுடியாது என்றும் அவர் கூறினார். மதநம்பிக்கையில் எந்தத் தலையீடும் இருக்கமுடியாது என்றும் அவர் கூறினார். தேசிய பெண்கள் ஆணையத்தின் பரிந்துரை மத்திய அரசின் நிலைப்பாடு அல்ல என்றும் மக்களின் மத நம்பிக்கையில் மோடி அரசு ஒருபோதும் தலையிடாது என்றும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com