கேரளா ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை வழக்கு - எஸ்.டி.பி.ஐ நிர்வாகி கைது

கேரளா ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை வழக்கு - எஸ்.டி.பி.ஐ நிர்வாகி கைது
கேரளா ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை வழக்கு - எஸ்.டி.பி.ஐ நிர்வாகி கைது

கேரளா மாநிலம் பாலக்காடு ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய நபராக எஸ்.டி.பி.ஐ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

2020 ஆண்டு நவம்பரில் பாலக்காடு மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சஞ்சித் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது செர்புளச்சேரியில் கைது செய்யப்பட்ட முகமது ஹாரூன் கொலையாளிகள் தப்பிச் செல்ல உதவியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பத்தாவது நபர் ஹாரூன் என்றும், கொலையாளிகள் தப்பிச் செல்ல உதவிய இவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஹாரூன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொறுப்பாளர் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொலையில் நேரடியாக தொடர்புடைய ஒருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்தில், இந்த வழக்கின் மற்றொரு பிரதான நபரான சலாமுக்கு உள்ளூர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது, அதற்கு எதிராக போலீசார் இப்போது மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டுபேர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) நிர்வாகிகள் மற்றும் ஒரு எஸ்டிபிஐ நிர்வாகியும் அடங்குவர்.

சஞ்சித்தின் மனைவி அர்ஷிகா சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றத்தில் தனது கணவர் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணையைக் கோரி வழக்குத் தொடர்ந்தார். இதனால் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, 27 வயதான சஞ்சித், கடந்த நவம்பர் 15ஆம் தேதி தனது மனைவியை பணியிடத்துக்கு அழைத்துச் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Source: The NewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com