பரபரப்பான கேரளா பேருந்து நிலையத்தின் பரிதாப நிலை!
கேரளாவில் தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளன. இதனால் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையங்கள் புறாக்கள் அமரும் இடமாகவும், நாய்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும் மாறியுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.7 லிருந்து ரூ.8ஆக உயர்த்தப்படவுள்ளது. அத்துடன் அதிவிரைவு சேவைகளுக்கு குறைந்தபட்ச ரூ.20 லிருந்து ரூ.22 ஆகவும், சூப்பர் டீலகஸில் ரூ.30 ஆகவும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் கட்டண உயர்வு போதியதாக இல்லை என கேரளாவின் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.