கேரளா: வீட்டிலேயே அக்குபஞ்சர் மூலம் பிரசவம்பார்த்த கணவர்-விபரீத முடிவால் தாயும்,சேயும் பலியான சோகம்!

கேரளாவில் பிரசவத்தின் போது தாயும், சேயும் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
model image
model imagefreepik

கேரளா மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நயாஸ். இவரது மனைவி சமீரா பீவி (36). இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நான்காவதாக கர்ப்பமடைந்த சமீராவுக்கு, கடந்த 20ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது கணவர், சமீராவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நயாஸை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

model image
model imagefreepik

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரக்கமண்டபம் பகுதியில் நயாஸ் - சமீரா தம்பதி வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததாகவும், சமீரா, நயாஸ்க்கு இரண்டாவது மனைவி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசவத்தின் போது தாயும், சேயும் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com