இந்தியா
வைரலான வீடியோ.. கேரள போலீசாருக்கு சிக்கனால் வந்த சிக்கல்! ஏன் தெரியுமா?
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இலவந்திட்டா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் கடைக்குச் சென்று சிக்கன் வாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சிக்கன் மற்றும் கிழங்கு சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இந்த காட்சிகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். பதிவிட்ட ஒரு சில நாட்களிலேயே பலரையும் இந்த காவல் நிலைய வீடியோ கவர்ந்துள்ளது. பலரும் இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பளித்து நல்லவிதமான கமெண்ட்களையும் பதிவு செய்துள்ளனர்.
kerala policept desk
இந்த சமையல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து டியூட்டி நேரத்தில் காவல் நிலையத்தில் வைத்து சமையல் செய்தது மற்றும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது குறித்து விளக்கமளிக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.