சைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்

சைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்

சைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்
Published on

சைக்கிளில் அதிவேகமாக சென்றதாக கூறி இளைஞர் ஒருவரிடம் காவல்துறையினர் ரூ,2,000 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த சம்பவம் அதி‌ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காசிம் என்பவர் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் கும்பாலா பகுதியில் சைக்கிளில் சென்றபோது, கேரள காவல்துறையினர் அவரை வழிமறித்து சைக்கிளை வேகமாக ஓட்டி வந்ததற்காக அபராதம் கட்டுமாறு கூறியுள்ளனர். மேலும் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி சைக்கிள் டயரை பஞ்சர் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து கேரள காவல்து‌றையினர் விதித்த ரூ.2,000 அபராதத்தை காசிம் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ரூ.500 மட்டும் ரசீது எழுதி, அதில் இருசக்கர வாகன எண்ணைப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com