நாயிடம் சயனைடு மட்டன் சூப்பை சோதனை செய்தாரா கேரளாவின் ஜூலி?: தீவிரமாகும் விசாரணை!

நாயிடம் சயனைடு மட்டன் சூப்பை சோதனை செய்தாரா கேரளாவின் ஜூலி?: தீவிரமாகும் விசாரணை!
நாயிடம் சயனைடு மட்டன் சூப்பை சோதனை செய்தாரா கேரளாவின் ஜூலி?: தீவிரமாகும் விசாரணை!

ஒட்டுமொத்த குடும்பத்தையே மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த கேரளாவின் ஜூலி, தனது வளர்ப்பு நாயிடம் சோதனை பார்த்த தகவல் தற்போது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். இவர் தனது திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த குடும்பத்தினரை கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொருவராக மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து வந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூலி தாமஸ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இருவரையும் கடந்த அக்டோபர் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் கிடைத்த தகவல் ஒன்று விசாரணையில் கூடுதல் வேகத்தை கூட்டியுள்ளது. 

இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வந்த நாயை ஜூலி பல ஆண்டுகளுக்கு முன் கொன்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் இதனை ஒப்புக்கொண்ட ஜூலி, நாய்க்கு வெறி பிடித்ததால் அதனை விஷம் கொடுத்து கொன்றதாக கூறியுள்ளார். ஆனால், இந்த காரணத்தை ஏற்க மறுத்துள்ள காவல்துறையினருக்கு, தொடர் கொலைகளை ஈடுபடுவதற்கு முன்பாக சயனைடை நாய்க்கு கொடுத்து ஜூலி பரிசோதனை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதற்காக சிறப்பு புலனாய்வு காவல்துறையினர், ஜூலியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று நாய் இறந்தது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஜூலியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாய் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி உடலை பரிசோதனைக்கு உட்படுத்த காவல்துறை திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சயனைடால் நாய் இறந்தது நிரூபனமானால்‌ அது தொடர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com