பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரி நீக்கம்!

பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரி நீக்கம்!
பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரி நீக்கம்!

பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பிஷப்புக்கு எதிராக போராடிய, கேரள கன்னியாஸ்திரி, திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவை சேர்ந்த முன்னாள் பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பலமுறை பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் ஃபிராங்கோ கைது செய்யப் பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

 முன்னதாக ஃபிராங்கோவை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டம் நடத்தினர். இதில், செயின்ட் மேரி தேவாலயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி லூசியும் (53) பங்கேற்றார். இதன் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக் கப் பட்டது. அவர் தேவாலயப் பணிகளில் ஈடுபடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதனையடுத்து அவருக்கு ஆதர வாக ஏராளமானோர் திருச்சபையில் கூடி விளக்கம் கேட்டனர். இதனால், கன்னியாஸ்திரி லூசி மீதான நடவடிக்கைத் திரும் பப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கேரள அரசு நடத்திய, பெண்கள் சுவர் போராட்டத்துக்கு ஆதரவாக கன்னியாஸ்திரி லூசி, கருத்துத் தெரிவித்திருந்தார். இது மதக்கோட்பாட்டுக்கு எதிரானது என்று திருச்சபை அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ’தனியாக கார், வீடு வாங்கி வாழ்ந்து வருகிறீர்கள். இதற்காக வங்கி கடனும் பெற்றுள்ளீர்கள். அனுமதியின்றி புத்தகங் களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். உடை கட்டுப்பாட்டையும் மீறியுள்ளீர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாவில் பேசியும் பத்திரிகைகளில் எழுதியும் வருகிறீர்கள். இது திருச்சபை விதிகளுக்கும் மதக் கோட்பாட்டுக்கும் எதிரானது’ என்று கூறி, விளக்கம் கேட்டது. அதற்கு அவர் நேரில் சென்று விளக்கம் அளித்திருந்தார். அந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று கூறி, திருச்சபையில் இருந்து அவர் நேற்று நீக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி கன்னியாஸ்திரி லூசி கூறும்போது, ‘’சுமார் 20 வருடங்களாக இந்த திருச்சபையிலேயே வாழ்ந்துவிட்டேன். என்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி, திருச்சபையில் இருந்து நீக்கும் கடிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். சட்டப்படி என்ன நடவடிக் கை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசித்து வருகிறேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com