கேரளாவில் இரவு ஊரடங்கு இன்று முதல் அமல் - ஐயப்ப பக்தர்களுக்கு விலக்கு

கேரளாவில் இரவு ஊரடங்கு இன்று முதல் அமல் - ஐயப்ப பக்தர்களுக்கு விலக்கு
கேரளாவில் இரவு ஊரடங்கு இன்று முதல் அமல் - ஐயப்ப பக்தர்களுக்கு விலக்கு

கேரளாவில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளிலிருந்து ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது.

கேரளாவில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு ஓணம் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி தினசரி தொற்று 41 ஆயிரத்தை கடந்து பதிவானது. தொடர்ந்து வந்த புத்தாண்டு கொண்டாட்டங்களும் கேரளாவின் நோய்த்தொற்று குறையாமல் இருப்பதற்கு காரணமாக அமைந்தன. இந்த சூழலில் இந்த ஆண்டு கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது. டிசம்பர் 30 முதல் 2022 ஜனவரி இரண்டாம் தேதி வரை இரவு நேர கட்டுப்பாடுகள் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கேரளாவில் இன்று(30.12.2021) முதல் ஜனவரி 2ஆம் தேதிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் கேரளாவில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளிலிருந்து ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com