\
இனவாதப் பேச்சு : டிவி தொகுப்பாளர் மீது வழக்குப்பதிவு

இனவாதப் பேச்சு : டிவி தொகுப்பாளர் மீது வழக்குப்பதிவு

இனவாதப் பேச்சு : டிவி தொகுப்பாளர் மீது வழக்குப்பதிவு
Published on

விவாத நிகழ்ச்சியில் இனவாதத்தை பரப்பும் வகையில் பேசியதாக தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் வேனு பாலகிருஷ்ணன். இவர் மீது டி.ஒய்.எஃப்,ஐ என்ற கட்சியின் நிர்வாகியும், சிபிஎம் கட்சியின் நிர்வாகியும் கொல்லம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அந்தப் புகார் மனுவில், கடந்த ஜூன் 7ஆம் நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பாலகிருஷ்ணன் குறிப்பிட்ட மதம் தொடர்பாகவும், இனவாதத்தை பரப்பும் விதமாகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், வேனு மீது காவல்துறையினர் 153 ஏ சட்டவிதியின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com