ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக ஹிஜாப்பை எதிர்த்த கேரள பெண்கள்! இந்தியாவின் முதல் குரல்
ஈரானில், ஹிஜாப்பை முறையாக அணியவில்லை என்று 22 வயது மாஷா அமினி என்ற பெண் மீது அந்நாட்டு காவல்துறையில் நடத்திய தாக்குதலில், கடந்த செப்டம்பர் 16ம் தேதி உயிரழந்தார்.
இதனை தொடர்ந்து ஈரானில் போராட்டம் வெடித்தது. பெண்கள் தங்களது தலை முடியை வெடிக்கொண்டும், ஹிஜாப்பை எரித்தும் வீதியில் போராட்டதில் இறங்கினர். இதனை தொடர்ந்து காவல்துறையிக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வன்முறை போக்கும் நிகழந்தது. இன்றளவு தொடரும் ஈரான் போராட்டதில் இதுவரை 150-க்கும் அதிகமான போராட்டக்கார்கள் காணாமல் சென்றுள்ளனர். 277 பேர் பலியாகி உள்ளனர். 14,000 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
இந்நிலையில், ஈரான் நடைபெற்று வரும் பெண்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெறுகிறது. அந்த வகையில், கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இஸ்லாமிய சுதந்திர சிந்தனை என்ற அமைப்பு சார்பில், ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட இஸ்லாமிய பெண்கள் தங்களது ஹிஜாப்பை எரித்து ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஈரானிய பெண்களுக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுட்டனர்.
ஈரானில் பெண்கள் நடத்தி வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக உலகமெங்ககும் பல ஆதரவு குரல் கேட்டு வந்தாலும், இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் தான் ஆதரவு போராட்டம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.