குடிப்பதற்காக மகளை கொடூரர்களுடன் அனுப்பிய தந்தை: விசாரணையில் பகீர்!

குடிப்பதற்காக மகளை கொடூரர்களுடன் அனுப்பிய தந்தை: விசாரணையில் பகீர்!
குடிப்பதற்காக மகளை கொடூரர்களுடன் அனுப்பிய தந்தை: விசாரணையில் பகீர்!

கேரளாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தந்தையும் குற்றவாளி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் சிறுமி ஒருவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டதாக சில நாட்களுக்கு முன் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ஆலப்புழா காவல்துறையினர், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

அதன்படி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாய் மனநிலை பாதிப்படைந்தவர். அவரது தந்தை ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் ஆதிரா என்ற (24) இளைஞர், சிறுமியின் தந்தைக்கு குடிப்பதற்காக ரூ.300 வழங்கிவிட்டு இரவு நேரத்தில் சிறுமியை வெளியே அழைத்து சென்றுள்ளார். 

இதையடுத்து 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் சிறுமி தகவல் அளித்ததன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஆதிரா முக்கிய குற்றவாளி. இதுதவிர, சிவில் போலீஸ் அதிகாரி நெல்சன் தாமஸ் (40), மாராரிகுளம் காவல் துணை ஆய்வாளர் கேஜி ராஜூ (38), ஜினுமோன் (22), ப்ரின்ஸ் (28) உள்ளிட்டவர்கள் இரண்டாம் நிலை குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் காவல் அதிகாரிகள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமியின் தந்தை உட்பட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com