உறவினரைக் கடித்த நாய்.. தரையில் அடித்துக் கொலை.. போலீசார் வழக்குப்பதிவு!

கேரளாவில் குடும்பத் தகராறில் உறவினர் வீட்டு நாயை தரையில் அடித்து கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
model image
model imagefreepik

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் இவருடைய உறவினர்களுக்கும் நீண்டநாட்களாகச் சொத்துப் பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (பிப்.23) நெடுங்கண்டம் பகுதிக்குச் சென்றிருந்த ராஜேஷுக்கும் அவருடைய உறவினர்களுக்கும் மீண்டும் சொத்துப் பிரச்னை சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், தன் உறவினர்களுடன் ராஜேஷ், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

model image
model imagefreepik

அப்போது அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய், ராஜேஷைக் கடித்துள்ளது. அதனால் கோபப்பட்ட ராஜேஷ், அந்த நாயை தூக்கி தரையில் அடித்துள்ளார். அதில், அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, வீட்டு நாயை தரையில் அடித்துக் கொன்ற ராஜேஷ்மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின்கீழ், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடும்பத் தகராறில் நாய், தரையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com