கேரள உள்ளாட்சி தேர்தல்: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்

கேரள உள்ளாட்சி தேர்தல்: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்
கேரள உள்ளாட்சி தேர்தல்: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்

கேரளாவின் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


கேரளாவில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 8, 10, மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 8-ஆம் தேதி இடுக்கி, திருவனந்தபுரம் கொல்லம், பத்தனம்திட்ட, ஆலப்புழா ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடந்து முடிந்தது. இதில் சராசரியாக 75 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று (10.12.20) கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த ஐந்து மாவட்டங்களில் 98,57,302 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 12,643 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.


மதியம் 12 மணி நிலவரப்படி 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கொரோனா பீதியிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

மூன்றாம்கட்ட தேர்தல் டிசம்பர் 14-ஆம் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் நடக்கிறது. கேரள மாநிலத்தில் மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். டிசம்பர் 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com