கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: நீடிக்கும் இடதுசாரிகள் ஆதிக்கம்!

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: நீடிக்கும் இடதுசாரிகள் ஆதிக்கம்!
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: நீடிக்கும் இடதுசாரிகள் ஆதிக்கம்!

கேரள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) ஆதிக்கம் தொடர்கிறது. காங்கிரஸ் கூட்டணி நகராட்சிகளில் எழுச்சி கண்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரையில், மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் 22 இடங்களை கைப்பற்றும் நிலையில் இருக்கிறது.

கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மாலை 4 மணி வெற்றி / முன்னிலை நிலவரம்:

> 6 மாநகராட்சிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 4 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 2 இடங்கள்.

> 86 நகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 35 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 45 இடங்கள்; பாஜக கூட்டணி 2 இடங்கள்.

> 14 மாவட்ட ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

> 152 ஊராட்சி ஒன்றியங்களில் இடதுசாரி கூட்டணி 112 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 40 இடங்கள்.

> 941 ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 517 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 374 இடங்கள்; பாஜக 22 இடங்கள்.

கேரளாவில் 941 கிராம ஊராட்சி, 152 ஊராட்சி ஒன்றியம், 14 மாவட்ட ஊராட்சி, 86 நகராட்சி, 6 மாநகராட்சி ஆகிய 1,199 உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடிவடைகிறது. தொடர்ந்து அந்த பதவிகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க டிசம்பர் 8, 10, 14. ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மாநிலத்தில் மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சராசரியாக 77 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com