\
ஓணம் பண்டிகை: கேரளாவில் கூடுதல் நேரம் திறக்கப்படும் மதுக்கடைகள் !

ஓணம் பண்டிகை: கேரளாவில் கூடுதல் நேரம் திறக்கப்படும் மதுக்கடைகள் !

ஓணம் பண்டிகை: கேரளாவில் கூடுதல் நேரம் திறக்கப்படும் மதுக்கடைகள் !
Published on: 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் மதுபானக் கடைகள் கூடுதல் நேரம் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில், மதுபான விற்பனை நிலையங்களின் நேரம் இன்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகைக்காக மது விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், கூட்டத்தை தவிர்ப்பதற்காக மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் பார்கள் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து காலை 11 மணி முதல் ஐந்து மணி வரை இயங்கி வந்த மதுபான விற்பனை நிலையங்கள், இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com