கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலையை அம்மாநில அரசு திரும்பப்பெற்றுள்ளது.
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட 3 கொரோனா பாதிப்பும் இவை மட்டுமே. இதையடுத்து அங்கு கடந்த 3 ஆம் தேதி முதலமைச்சர் பினராய் விஜயன் அவசரநிலையை பிறப்பித்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளாவில் கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படாததை அடுத்து அங்கு அவசர நிலை திரும்பப்பெறப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா அறிகுறிகளுடன் உள்ள 61 பேருக்கு தனி வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 3 ஆயிரம் பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.