\
கேரள சட்டப்பேரவையில் தமிழில் பதவியேற்றுக் கொண்ட எம்.எல்.ஏ!

கேரள சட்டப்பேரவையில் தமிழில் பதவியேற்றுக் கொண்ட எம்.எல்.ஏ!

கேரள சட்டப்பேரவையில் தமிழில் பதவியேற்றுக் கொண்ட எம்.எல்.ஏ!
Published on

கேரள மாநிலத்தில் அண்மையில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கேரள சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் இந்த பதவியேற்பு நிகழ்வில் கேரள மாநிலம் தேவிக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜா தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டார். 

36 வயதான அவர் வழக்கறிஞர் ஆவார். கோவையில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ள அவர், முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com