கேரளா: மனைவி மற்றும் மகளை எரித்துக் கொன்றுவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு

கேரளா: மனைவி மற்றும் மகளை எரித்துக் கொன்றுவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு

கேரளா: மனைவி மற்றும் மகளை எரித்துக் கொன்றுவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Published on

மலப்புரம் அருகே மனைவி மற்றும் மகளை தீ வைத்து எரித்துக் கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொட்டிபுரம் பகுதியை அடுத்த பெருந்தலமன்னா கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது. போக்சோ வழக்கு குற்றவாளியான இவர், வியாழக்கிழமை தனது மனைவி மற்றும் பதினொரு வயது மகள் மற்றும் ஐந்து வயது மகள் ஆகியோரை சரக்கு வாகனத்தில் அமர்த்தி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.

இதில் முகமதுவின் மனைவியும் 11 வயது மகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சுற்றத்தார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்களும் வந்து வானத்தில் இருந்த முகமதுவின் ஐந்து வயது மகளை உயிருடன் மீட்டு மலப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து மனைவி குழந்தையை தீ வைத்து எரித்துக் கொலை செய்த முகமது தானும் தீவைத்துக் கொண்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த கொடூர நிகழ்விற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து மலப்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com