\
சபரிமலையில் சரண கோஷமிட தடை இல்லை - கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலையில் சரண கோஷமிட தடை இல்லை - கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலையில் சரண கோஷமிட தடை இல்லை - கேரள உயர்நீதிமன்றம்
Published on

சபரிமலை சந்திதானத்தில் பக்தர்கள் சரண கோஷமிட போலீசார் விதித்த தடையை நீக்கி கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கேரளாவில் பெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அக்டோபர் மாதம் இரண்டு பெண்கள் சன்னிதானம் வரை சென்று பக்தர்கள் போராட்டத்தால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் துரிதமாக செயல்பட்டார். ஆனால் அவரின் செயல்பாடுகள் தோல்வியில் முடிவடைந்தது. 

பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வலுத்ததால் போலீசாரின் கிடுக்குபிடியும் அதிகரித்தது. அந்த வகையில்  பக்தர்கள் போராட்டத்தில் 'சரணம் ஐயப்பா' என்ற கோஷம் போடுவதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். 

இதற்கு எதிராக இந்து அமைப்பினர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சபரிமலை சன்னிதானத்திற்குள் சரணம் ஐயப்பா என்ற கோஷம் போட தடை இல்லை என தெரிவித்துள்ளது. 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனு ஜனவரி 22 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com