தண்ணீர் பாட்டில்எக்ஸ் தளம்
இந்தியா
கேரளா | திருமண நிகழ்ச்சிகளில் தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை!
திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்ணீர் பாட்டில்எக்ஸ் தளம்
திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பிளாஸ்டிக் தொடர்பான வழக்கு ஒன்றில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. திருமண வரவேற்பு, விருந்து மற்றும் முக்கிய நிகழ்வுகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கு பதிலாக, கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தலாம் என்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர்.