\
98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி!

98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி!

98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி!
Published on

96 வயதில் 98 சதவீதம் மார்க் எடுத்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மாவுக்கு கேரள கல்வி அமைச்சர் இலவச லேப்டாப்பை வழங்கியுள்ளார் 

இந்தியாவில் எழுத்தறிவில் முதல் இடத்தில் இருப்பது கேரளா. 100 சதவீதம் எழுத்தறிவை முழுமை செய்யும் பொருட்டு அம்மாநிலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ‘அக்‌ஷரலக்ஷம்’ என்ற கல்வியறிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின் கீழ் கேரள அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வினை பல்வேறு வயதினை சேர்ந்தவர்களும் எழுதி வருகிறார்கள். குறிப்பாக படிப்பைத் தவறவிட்ட முதியவர்களுக்காக இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு 2086 மையங்களை கேரள அரசு ஏற்படுத்தியது. இதன் மூலம், 21,908 வார்டுகளில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், படிக்கும் திறன், எழுதும் திறன் மற்றும் கணித அறிவை சோதிக்கும் வகையில் கேள்விகள் இருக்கும். கேரள கல்வியறிவு திட்டத்தின் கீழ் படிக்கும் மூத்த மாணவியாக, 96 வயது கார்த்தியாயினி அம்மா திகழ்கிறார். தேர்வில் அவர் 98 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். 


வீட்டின் பொருளாதார சூழல் காரணமாக கார்த்தியாயின் அம்மா தனது இளம் வயதில் பள்ளிப் படிப்பை கைவிட்டிருக்கிறார். கணவர் இளம் வயதிலே மரணமடைந்ததால், தனது 6 குழந்தைகளை வளர்ப்பதற்காக வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். கார்த்தியாயினி அம்மா, 60 வயதான தனது மகளிடம் இருந்துதான் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது மகள் சில வருடங்களுக்கு முன்பு, 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில் 98 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற, கார்த்திகாயினி அம்மா, கம்ப்யூட்டரை எப்படி இயக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகக் கூறியிருந்தார். இதையடுத்து கேரள கல்வித்துறை அமைச்சர் சி.ரவீந்திரநாத், தீபாவளி அன்று அவருக்கு லேப்டாப்பை பரிசாக வழங்கியிருக்கிறார். அதில் பெயரை எப்படி டைப் செய்ய வேண்டும் என்றும் அவருக்கு கற்றுக்கொடுக்கப் பட்டது. அதை புன்னகையோடு கற்றுக்கொண்டார் அந்த அம்மா. நேரம் கிடைக்கும்போது கம்ப்யூட்டரை மேலும் படித்துத் தெரிந்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com