\
சபரிமலை தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கும் கேரள அரசு..!

சபரிமலை தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கும் கேரள அரசு..!

சபரிமலை தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கும் கேரள அரசு..!
Published on: 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தெளிவு பெறுவதற்காக சட்ட வல்லுநர்களுடன் கேரள அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில் சில தெளிவின்மைகள் உள்ளதாகவும் இதற்கான விளக்கங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் சபரிமலையில் இந்த சீசனில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தாங்கள் அளித்த தீர்ப்பை இந்தாண்டும் தொடரலாம் என்பதுபோல உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு இருப்பதாகவும் எனினும் இதை தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை தாங்கள் செயல்படுத்துவது உறுதி என்றும் கேரள முதல்வர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com