கொரோனா நோயாளிகளை பராமரிக்க புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் - கேரள அரசு வெளியீடு
கேரள அரசு கொரோனா நோயாளிகளை பராமரிக்க புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அவையாவன:
1. அனைத்து மருத்துவமனைகளில் உள்ள காய்ச்சல் கிளினிக்குகள், கொரோனா காய்ச்சல் கிளினிக்குகளாக மாற்றப்பட்டு கொரோனா
விதிமுறைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின் படி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
2. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அதே போல அவர்களுக்குத் தேவையான லேப்
வசதிகள், மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்
3.அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனா தொடர்பான பணிகளில் முழுகவனம் செலுத்தி மீதமுள்ள நேரங்களில் கொரோனா தொற்று அல்லாத அவசர கால நோயாளிகளை கவனிக்க வேண்டும். வரும் மே 15 தேதி வரை கடைபிடிக்கப்பட வேண்டிய இந்த முறையின் விதிமுறைகள் பின்னர் வழங்கப்படும்.
4. தாலுகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்வதோடு குறைந்தது 5 வெண்டிலேட்டர் (Bipap) வசதி
கொண்ட படுக்கைகள் இடம்பெற வேண்டும். அதே போல களத்தில் பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன்
வசதியையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
5. அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் சிஎல்சிடிசி இடம் பெற வேண்டும்.
6. தேவைப்படும் போது, வீடுகளில் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு அதன்படி செயலாற்றலாம்.
மருத்துவமனைகளில் தேவையான மருந்து இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
7. படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின், அவரது வீட்டில் எடுத்துச்செல்லக் கூடிய ஆக்சிஜன் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே போல அவரின் பிற சிகிச்சைக்கான உதவியை தன்னார்வலர்கள் மற்றும் பஞ்சாயத்து குழுக்கள் செய்ய வேண்டும்.
8.வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவோர்க்கு தேவையான சிகிச்சை, மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
9. தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கொரோனா காய்ச்சல் பிரிவை தொடங்கி சிகிச்சையை வழங்குதல் வேண்டும்.
10. தேசிய மற்றும் அகில அளவில், சுகாதாரப் பணியாளர்கள் அழிக்கக்கூடிய கவுன்கள், என்95 முககவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்துகின்றனர். அதை மருத்துவமனையில் உள்ள குழுக்கள் ஆராய்ந்து இங்கும் அதனை செயல்படுத்துவது குறித்த முடிவை எடுக்கலாம்
முன்னதாக இன்று கேரளாவில் 14,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.