உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம்: கேரள அரசு அறிவிப்பு

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம்: கேரள அரசு அறிவிப்பு
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம்: கேரள அரசு அறிவிப்பு

கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியதையடுத்து குமரி மாவட்டம் பேரிழப்பை சந்தித்தது. மாவட்டம் முழுவதும் இந்த புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கேரளாவிலும் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. புயல் நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக-கேரள மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் காப்பாற்ற முடியாததால் கடலில் மூழ்கி மீனவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி கேரளாவில் 31 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, ஒகி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com