\
மலை இடுக்கிலிருந்த இளைஞரை, பத்திரமாக மீட்டதற்கு இந்திய ராணுவத்துக்கு கேரள அரசு நன்றி

மலை இடுக்கிலிருந்த இளைஞரை, பத்திரமாக மீட்டதற்கு இந்திய ராணுவத்துக்கு கேரள அரசு நன்றி

மலை இடுக்கிலிருந்த இளைஞரை, பத்திரமாக மீட்டதற்கு இந்திய ராணுவத்துக்கு கேரள அரசு நன்றி
Published on

மலை இடுக்கில் சிக்கியிருந்து மீட்கப்பட்ட இளைஞர் பாபுவை, பத்திரமாக மீட்டுத்தந்ததற்கு, இந்திய ராணுவத்துக்கு கேரள அரசு நன்றி தெரிவித்துள்ளது.

மலையேற்றத்தின்போது நடுவழியில் கால் இடறியதில் பாபு, உருண்டு விழுந்து மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கிக் கொண்டார். இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், மலையின் மேல் பகுதிக்கு சென்று கயிறு மூலம் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் விழுந்த பகுதி சரியாக தென்படாததால் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அப்போது தான் பார்வைக்கு புலப்படாத இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இடுக்கு பகுதி என்பதால் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது. உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் பாபுவை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் சூழலில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ராணுவத்தின் உதவியை நாடினர். இதையடுத்து பெங்களூருவில் இருந்து ஒரு பிரிவினரும், தமிழகத்தின் வெலிங்டனில் இருந்து ஒரு பிரிவினரும் குரும்பாச்சி மலைக்கு புறப்பட்டுனர். அவர்கள் சில மணி நேரத்துக்கு முன் பாபுவை பத்திரமாக மீட்டனர்.

தன்னை மீட்ட அவர்களுக்கு, முத்தம் கொடுத்து நன்றி கூறினார் பாபு. கேரள அரசு சார்பில், முதல்வர் பினராயி விஜயனும் இந்திய ராணுவத்துக்கு நன்றி கூறினார். கேரள அரசு சார்பில், இந்திய ராணுவத்துறைக்கு நன்றி கூறியிருந்தார் முதல்வர் பினராயி விஜயன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com