\
வால்பாறை அருகே கேரள மாணவியின் சடலம்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

வால்பாறை அருகே கேரள மாணவியின் சடலம்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

வால்பாறை அருகே கேரள மாணவியின் சடலம்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Published on

காதலிக்க மறுத்ததால் கேரளாவைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்து உடலை கோவை மாவட்டம் வால்பாறை அருகே வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வறட்டுப்பாறை எஸ்டேட் வனப்பகுதியில் பெண் உடல் ஒன்று கிடப்பதைப் பார்த்த பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் WATER FALLS எஸ்டேட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவ்வழியே வந்த காரில் ரத்தக்கறை இருந்ததைக் கண்டனர். காரை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் சபீர் என்பதும் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் வறட்டுப்பாறையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடலை வீசியதும் அவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தம்மை காதலிக்க மறுத்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை கொச்சியில் இருந்து வால்பாறைக்கு கடத்தி வந்த கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசியதாக காவல்துறையினடம் சபீர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com