பள்ளி அறையில் மாணவியை கடித்த பாம்பு - ஆசிரியையின் அலட்சியத்தால் உயிரிழந்த சோகம்

பள்ளி அறையில் மாணவியை கடித்த பாம்பு - ஆசிரியையின் அலட்சியத்தால் உயிரிழந்த சோகம்

பள்ளி அறையில் மாணவியை கடித்த பாம்பு - ஆசிரியையின் அலட்சியத்தால் உயிரிழந்த சோகம்
Published on

கேரளாவில் பள்ளி வகுப்பறையில்  மாணவி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். 

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் தொழில் முறை சார்ந்த அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷேஹலா(Shehala) என்ற மாணவி 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இவர் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு தனது வகுப்பு அறையில் இருந்து பாடத்தை கவனித்து கொண்டிருந்தார். 

அந்த சமயத்தில் இவரை பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த சக மாணவர்கள் ஆசிரியைக்கு தகவல் அளித்துள்ளனர். எனினும் அந்த ஆசிரியை, மாணவி ஷேஹலாவை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள் என்று கூறிவிட்டு பாடத்தை நடத்தியதாக தெரிகிறது. இதனால் ஷேஹலாவை ஒரு மணி நேரத்திற்கு பிறகே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். எனினும் நேரமானதால் விஷம் அதிகரித்து மாணவி ஷேஹலா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக கேரளா அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தப் பள்ளியில் சிறுமி அமர்ந்து இருந்த இடத்திற்கு கீழ் ஒரு சிறிய ஓட்டை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com