8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ’மிரட்டல்’ மீட்பு

8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ’மிரட்டல்’ மீட்பு
8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ’மிரட்டல்’ மீட்பு

கேரள மாநிலம் அட்டப்பாடியில் கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு கயிறுகட்டி மிரட்டலாக மீட்கப்பட்டனர்.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதியில் உள்ள பவானி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் ஓடுவதால் ஒருபுறம் இருந்து அடுத்த கரைக்கு வர முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். இதையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற பேரிடர் மீட்புப் படையினர் ஆற்றின் ஒரு கரையில் உள்ள மரத்துக்கும் மறுகரையில் உள்ள மரத்துக்கும் இடையே கயிறு கட்டினர்.

அதன் மூலம், 60 வயது பழனியம்மாள், அவர் மகன் முருகேசன், அவர் குழந்தை மைனா, மனைவி எட்டு மாத கர்ப்பிணி லாவண்யா, பொன்னன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மிரட்டலாக மீட்கப்பட்டனர். கர்ப்பிணி லாவண்யாவை மீட்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கீழே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்க, அதன்மேல் கட்டப்பட்ட கயிறில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அனைவரும் மறு கரைக்கு வந்து சேர்ந்தனர்.

மீட்கப்பட்டது பற்றி பழனியம்மா கூறும்போது, ‘’அதிக ஆபத்தான முயற்சிதான். சுமூகமாக முடிந்ததில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com