கேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் மோடி

கேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் மோடி

கேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் மோடி

பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்து வருகிறார். 

கேரள மழை நிலவரம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைத் நேற்று தொடர்புகொண்டு கேட்டறிந்துள்ளார். அதன்பின் வாஜ்பாய் இறுதி நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று மாலையே கேரளா வந்தடைந்தார். இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்தில் புறப்பட்ட மோடி முதல்கட்டமாக கொச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார். தற்போது திருவனந்தபுரத்தில் இருந்து மோடி கொச்சி சென்றுள்ளார். அவருடன் ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மழை பாதிப்புகளை பிரதமர் பார்வையிடுகிறார். இதனை அடுத்து முதலமைச்சர் பினராயி விஜயனுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்துவார் என சொல்லப்படுகிறது. 

ஏற்கனவே கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதல்கட்டமாக, 100 கோடி ரூபாயை மத்திய அரசு அறிவித்தது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் மீட்க கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பும் படி பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமானப்படைக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com