நீரில் மூழ்கிய சர்வதேச கொச்சி விமான நிலையம்

நீரில் மூழ்கிய சர்வதேச கொச்சி விமான நிலையம்

நீரில் மூழ்கிய சர்வதேச கொச்சி விமான நிலையம்

கன மழையால் கேரள மாநிலம் கொச்சியில் சர்வதேச விமான நிலையம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கேரளாவில் பெய்த கனமழையில் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தால் சர்வதேச விமான நிலையம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.  இதனால் வரும் 26ம் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருக்கும் விமான ஓடுதளம், விமானங்களை நிறுத்தி வைக்கும் இடம் உள்ளிட்ட அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்களும் நீரில் மூழ்கியுள்ளன. 

ஹெலிகாப்டர் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் மூலம் பார்க்கும்போது விமான நிலையம் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் மூழ்கியிருப்பது தெரிகிறது. குடியிருப்புகள், அலுவலகங்கள், அடுக்குமாடி கட்டடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம் மூழ்கியுள்ளதால் கொச்சியிலிருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் கோழிக்கோடு, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி கப்பற்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அதேவேளையில், மெட்ரோ சேவைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com