மீட்புப் படை வீரர்களுக்கு நன்றி ! கேரள மக்களின் நெகிழ்ச்சி
கேரளாவில் மீட்புப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக THANKS என்ற வார்த்தை மொட்டை மாடியில் பெயிண்ட்டால் எழுதப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பலர் மொட்டை மாடியில் தஞ்சமைடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இந்நிலையில் கொச்சியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சிக்கித்தவித்த இரண்டு பெண்களை கப்பல் படை அதிகாரி விஜய் வர்மா என்பவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக THANKS என்ற வார்த்தை மொட்டை மாடியில் பிரமாண்ட அளவில் பெயிண்ட்டால் எழுதப்பட்டுள்ளது. நெகிழ்ச்சியான இந்தப் புகைப்படம் விமானப் படையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
Read Also -> கேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் !
இந்நிலையில் கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் கொச்சி விமான நிலையம் முடங்கியது. ஓடுதளத்தை வெள்ளம் சூழ்ந்ததால் ஒருவாரத்திற்கு மேலாக கொச்சியில் விமான சேவை தடைபட்டிருந்தது. இந்த நிலையில் கொச்சி விமான நிலையத்திற்கு அருகேயுள்ள, கடற்படை தளத்தில் இருந்து விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 8 நாட்களுக்குப் பிறகு கேரள மாநிலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது. அதன்படி ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் இன்று காலையில் கொச்சியில் தரையிறங்கியது.